ராஜீவ் கொலை வழக்கு:சிபிஐக்கு அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து, சிபிஐ கொடுத்துள்ள விசாரணை அறிக்கை  திருப்தி அளிக்கவில்லை என்றும்,  வேறு புதிய அறிக்கையை தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டு உள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சதி குறித்து பேரறிவாளன்  தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில், உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி, பேரறிவாளன் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தன்மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி  நிரூபிக்கப்பட வில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்க இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக  சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள  அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இல்லை என்பதால், புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.