பிரதாப்கர், உத்திரப் பிரதேசம்

றைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்த்து நாடெங்கும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மீதமுள்ள தொகுதிகளில் பிரசாரம் கடுமையாக நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் தற்போதைய மோடி ஆட்சியில் உள்ள வேலைவாய்ப்பு இன்மை, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட வைகளை பற்றி பேசி வந்தாலும் ரஃபேல் ஊழல் பிரசாரத்தில் அதிக அளவில் இடம் பெற்று வருகிற்து. இது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

நேற்று உத்திரப்பிரதேச மாநில பிரதாப்கர் பகுதியில் பிரதமர் மோடி ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “என்னுடைய புகழை கெடுக்க காங்கிரஸ் கட்சி என்னைப் பற்றி பொய்யான அவதூறுகள் தெரிவித்து வருகின்றன. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரசுடன் ரகசிய தொடர்பில் உள்ளன. அனைவரும் இணைந்து என் மீது அவப்பெயர் உண்டாக்க முயல்கின்றனர்.

அது மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னையும் தனது குடும்பத்தையும் மிகவும் சுத்தமானவர்கள் என மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள என் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவருடைய தந்தை ராஜிவ் காந்தியை ஒரு காலத்தில் சுத்தமானவர் என அவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக உயிர் இழந்தார்” என பேசி உள்ளார்.

இந்த பேச்சு மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.