ராஜிவ் காந்தி சிலை உடைப்பு : காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Rajiv Gandhi

க்கலை

ன்யாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது தக்கலை.   தக்கலையில் குமாரபுரம் சந்திப்பில் கான்கிரீட்டால் செய்யப்பட்ட ராஜிவ் காந்தியின் சிலை உள்ளது.   மார்பளவு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் கன்னப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சிதைத்துள்ளனர்.   இதை கண்ட  மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

கன்யாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர்.   சிலையை உடைத்தவர்களை கண்டு பிடித்து உடனடியாக கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.