குழந்தைகளுக்கு சிறப்பான ஆங்கில கல்வியை இலவசமாக அளிக்கும் ராஜீவ்காந்தி – வாழப்பாடி ராமமூர்த்தி அறக்கட்டளை

ராஜீவ்காந்தி – வாழப்பாடி ராமமூர்த்தி  அறக்கட்டளை, குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் இலவசமாக ஆங்கிலம் பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய முன்னாள் அமைச்சர் அமரர் வாழப்பாடி கே.ராம்மூர்த்தி நிறுவிய, “ராஜீவ்காந்தி – வாழப்பாடி ராமமூர்த்தி அறக்கட்டளை” பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறது. வாழப்பாடி ராம சுகந்தன் நிர்வாக அறங்காவலராக உள்ளார்.

இந்த அறக்கட்டளையின் இன்னொரு சேவையைத் துவக்கியுள்ளது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கும் பணியையும் தற்போது செய்ய இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏன் ஆங்கிலம் கற்றுத்தரவேண்டும்?

1. உலகம் முழுவதும் அனைவரும் பேசக்கூடிய பொதுவான மொழியாக ஆங்கிலம் உள்ளது. உலக மக்கள் வேறு மொழிகளை பேசிவந்தாலும் அனைவருக்கும் தெரியக்கூடிய மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது.

2. ஆங்கிலம் தெரிந்திருந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கிடைப்பதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும்

3. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தொழில்துறையிலும், நிதித்துறையிலும் தலைவர் பதவிக்கு நங்கு ஆங்கிலம் தெரிந்த நபர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

4. பிரிட்டன் விரிவாக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாக 15ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலம் இருந்து வந்தது.

5. ஆங்கிலம் அறிவியல் சார்ந்து இருப்பதால் அதனை குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்கு மற்றுமொரு காரணம்.

6. 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத்தை விரைவில் கற்றுக்கொள்ள முடியும்.

யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன?

நிதி அளவிலும், மதத்தின் அடிப்படையிலும், சமூகம் சார்ந்தும் யார் பின் தங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய கல்வி முறைக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கான பயிற்சி, பாடப்புத்தகம், மாணவர்களை தயார்படுத்துதல், கற்பிக்கும் முறை உள்ளிட்டவைகள் பிரச்சனையாக உள்ளன. ஆங்கிலம்

தவறாக கற்பிக்கப்படும்  மாணவர்கள் உயர்கல்வியை முழுமையாக பெறமுடியாமல, வேலைக்கு செல்லும் போதும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன் கிடைக்கும் வாய்ப்புகளை இழக்கின்றனர். வேலை தேடும் நபர்கள் ஆங்கிலத்தில் பேச மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதில் ராஜீவ்காந்தி – வாழப்பாடி கே.ராமமூர்த்தி அறக்கட்டளையின் பங்கு என்ன?

1.இந்த தொண்டு நிறுவனம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆங்கிலம் கற்க ஒரு தளமாக விளங்கும். இதனை பயன்படுத்தி கொண்டால் அவர்கள் உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் ஆங்கிலத்தில் எளிமையாக பேச முடியும் .

2. குழந்தைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுப்பிடிப்புகள் மூலம் சாதனை படைக்க இந்த தொண்டு நிறுவம் மிகப்பெரிய பாதையை வகுத்துள்ளது.

3. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் கற்பிப்பதுடன், அவர்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு அதற்கான பயிற்சியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.