கமதாபாத்

நேற்று குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சி துவக்கி உள்ள 3 நாள் ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி நாளை பங்கேற்க உள்ளார்.

குஜராத் தேர்தலில் பாஜக ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது.   அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சென்ற முறை பெற்ற 61 இடங்களில் இருந்து தற்போது 77 இடங்களை வென்றுள்ளது.    அது தவிர காங்கிரசின் கூட்டணி கட்சிகள் இரு இடங்களிலும், காங் ஆதரவு அளித்த சுயேச்சை ஒருவரும் வென்றுள்ளனர்.   கிராமப்புறங்களில் அதிக வாக்குகள் பெற்ற காங்கிரஸ் நகர்ப்பகுதியில் குறைவான வாக்குகள் பெற்றுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் நேற்று ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளது.   இந்த ஆய்வுக் கூட்டம் குஜராத் மாநிலம் மேசானா மாவட்டத்தில் உள்ள ஓய்வு விடுதியில் நடை பெற்று வருகிறது.   மூன்று நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நேர செயல்பாடுகள் குறித்த கருத்துப் பரிமாற்றம், வெற்றி மற்றும் தோல்வி குறித்து முழு ஆய்வு ஆகியவை நடைபெற உள்ளது.   அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுவது குறித்தும்,  வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசானை நடைபெற்று வருகின்றது.

இக்க்கூட்டத்தின் கடைசி நாளான நாளை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார்.   கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின் தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.   அதற்காக நாளை மாலை அகமதாபாத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.