Random image

ராஜீவ்காந்தி கொலை: 7 பேரை விடுவிக்கும் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

டில்லி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து தீவிரவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட தீவிரவாத செயல். தீவிரவாதம், தீவிரவாதிகளுடன் எந்த சமரசமும் செய்துகொள்ள கூடாது.

ராஜீவ் காந்தியையும், பிறரையும்தானே கொலை செய்தார்கள் என்று நட்பு கட்சியான அதிமுக மற்றும் தன்னுடைய ஆளுநரின் மூலம் பா.ஜ.க, 7 பேரையும் விடுதலை செய்ய போகிறதா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.