Random image

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை: ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரை யும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், அதில் எந்தவித மாற்றமுமில்லை,  தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 20ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பிரமாண்டமாக  நடைபெறவுள்ளது. அதற்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட  இருக் கிறது. அதற்கான  இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதி யான நிலைப்பாடு என்றும், அதுவே ஜெயலலிதாவின் முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனாலேயே அமைச்சரவை தீர்மானம் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும்,  தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும் கூறினார்.

7 பேரை விடுவிப்பது தொடர்பாக, காங்கிரசை நிர்பந்தித்து தமிழக அரசுடன் ஒத்துப்போக வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்துவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதை ஏற்க முடியாது எனக் கூறிய அவர், கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு என்று கூறியவர், தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தரவில்லை எனவும் கூறினார்.