பேரறிவாளன் பரோல் மேலும் 1 மாதம் நீட்டிப்பு?

சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அவரது தாயின் வேண்டுகோளை ஏற்று, பேரறிவாளனுக்கு வழங்கியுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருபவர் பேரறிவாளன். இவர் வேலூரை சேர்ந்த  அற்புதம்மாள், குயில்தாசன் தம்பதிகளின் மகன். இவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து முறையிட்டு வந்தார்.

அவரது  நீண்ட கால  கோரிக்கை சமீபத்தில் தமிழக அரசால்  ஏற்கப்பட்டு பேரறிவாளனை பல்வேறு நிபந்தனைகளுடன்  ஒரு மாத கால பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 24-8-2017 அன்று அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அவரது பரோல் வரும் 24தேதியுடன் முடிவடைய இருப்பதால், மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவர் மனு கொடுத்தார்.

அதன்படி, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ள தாக தகவல் கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.