ராஜீவ் கொலை: விசாரணை அறிக்கையை பேரறிவாளனிடம் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

டில்லி:

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை விவரத்தை பேரறிவாளன் தரப்பிடம் கொடுக்கக்கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன்  உள்ளிட்டோர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் குளறுபடிகள் இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பேரறிவாளர் தரப்பில்,  ராஜீவ் கொலை தொடர்பாக, சர்வதேச தொடர்புகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் குளறுபடி உள்ளதாகவும்,  ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு குறித்து விசாரிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது,

இதைத்தொடர்ந்து இதுகுறித்து அடுத்த விசாரணையின்போது பதிலளிக்க மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அது குறித்த விசாரணை அறிக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையின் நகலை, பேரறிவாளர் தரப்பு வழக்கறிஞர் கோரியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ராஜீவ் கொலைக்கு பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான விசாரணை அறிக்கையை, பேரறிவாளன் தரப்பிடம் கொடுக்ககூடாது என்று  சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.