டெல்லி: தடுப்பூசிகளை விரைவாக எடுத்து செல்ல ராணுவ விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு உதவி செய்யவும் ராணுவ அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதை ராணுவ அமைச்சசர் ராஜ்நாத் சிங் தெரிதவித்துள்ளார்.

நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பு, அதை உடனுக்குடன் அனுப்பி வைப்பது குறித்து,  பிரதமர் தலைமையில் த்திய மந்திரி சபை கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) பகல் 11 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் தடுப்பூசிகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றி அனைத்து துறைகளையும் பிரதமர் மோடி கேட்டு உள்ளார். அதன்படி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், தடுப்பூசி வினியோகத்துக்காக ராணுவ விமானங்களை இயக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசியை எடுத்து செல்ல ராணுவ வாகனங்களை கொடுத்து உதவுவது பற்றியும் ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். அதன்படி தேவையை பொறுத்து உடனுக்குடன் விநியோகம் செய்யும் வகையில், ராணுவ விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐதராபாத், புனே நகரங்களில் இருந்து தடுப்பூசிகளை கொண்டு செல்ல சிறப்பு ராணுவ விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாநில அரசுகளக்கு ஆயுதப்படையினரும் உதவி செய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்டார் ராணுவ மருத்துவமனையை உபயோகப்படுத்தவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் மிக மூத்த இராணுவ அதிகாரி முதலமைச்சருடன் தொடர்புகொண்டு தேவையைப் புரிந்துகொண்டு, முடிந்தவரை பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.