பாரிஸ்

பிரான்ஸ் நாட்டில்  ஆயுத பூஜையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரபேல் விமானங்களுடன் கொண்டாடுகிறார்.


நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜைக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஆயுத பூஜை பண்டிகைக் கொண்டாட்டங்கள் மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸில் ரஃபேல் விமானங்களோடு ஆயுத பூஜைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்

இன்று  பிரான்ஸில் உள்ள மெரிக்னா பகுதியில் நடக்கும் ரஃபேல் விமான ஒப்படைப்பு நிகழ்வில் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரண்ட்ஸ் பார்லி கலந்துக் கொள்கின்றனர்  இந்த நிகழ்வில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் பரத் புர்ஷன் பாபு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் 36 ரஃபேல் விமானங்களை அதிகாரப்பூர்வமாக பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது.  ஆனால் இதற்கான பணிகள் பாக்கி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   எனவே மீதமுள்ள பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதம்தான் விமானங்கள் இந்தியாவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.