டில்லி

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் காஷ்மீரில் பாகிஸ்தானின் ஊடுருவல் நடவடிக்கைகள்  45% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

மோடி அரசின் மூன்று வருட நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது:

கடந்த செப்டெம்பர் மாதம் இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் எல்லை அருகே முகாமிட்டிருந்த தீவிரவாதிகளின் மேல் தாக்குதல் செய்யப்பட்டது.,

இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் முகாம் முழுதும் அழிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தானின் ஊடுருவல் நடவடிக்கைகள் 45% வரை குறைந்துள்ளது

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

இதுவரை அங்கு 368 பயங்கரவாத நடவடிக்கைகள் களையப்பட்டுள்ளது

கடந்த மூன்றாண்டுகளில் நக்சல் தீவிரவாத நடவடிக்கை 25%, இடது சாரிகளின் தீவிரவாத நடவடிக்கை 65% குறைந்துள்ளது

தீவிரவாதிகள் தாமாக சரணடைவது 185% அதிகரித்துள்ளது.

இவ்வாறு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் தெரிவித்தார்