டில்லி:

த்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்க்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி.யில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா, மாநில பா.ஜனதா தலைவர் கே.பி.மவுர்யா, யோகி ஆதித்யநாத் எம்.பி. ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில்,  மத்திய  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜ்நாத் சிங்கிற்கு ஆர்.எஸ்.எஸின் ஆதரவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனேவே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார். அதே போல உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி. தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக  ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது