சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மோடிக்கு பின்னடைவு இல்லை : ராஜ்நாத்

டில்லி

ட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் மோடிக்கு பின்னடைவு இல்லை என உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுக்கு பெரும் வெற்றி கிடத்துள்ளது. பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகளால் மிகவும் பின்னுக்கு சென்றுள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைக்க உள்ளது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு மிக அருகில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவுடன் மிகவும் நெருங்கிய இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளால் மோடி மிகவும் பின்னடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் பலர் இது தோல்வி இல்லை என கருத்து கூறி வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அரசின் உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராஜ்நாத் சிங், “நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர்கள் மாநில அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர். ஆகவே இதற்கும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இதை மோடிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என கூறுவது தவறாகும்.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி படு தோல்வி அடைந்ததும் தெலுன்க்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் இந்த அடிப்படையில் தான். அந்தந்த மாநில விவகாரங்கள் மட்டுமே சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர்களின் கவனத்தில் கொள்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்” என கூறி உள்ளார்.