டில்லி

டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

டோக்லாம் மூன்று நாட்டு எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை குவித்து வைத்துள்ளனர்.   எந்த நேரமும் போர் மூளலாம் என்னும் அபாய நிலையில் எல்லைப்ப்பகுதி உள்ளது.   சமீபத்தில் மேலும் இந்தியப்படைகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் பட்டது.  அதைத் தொடர்ந்து சீனாவும் தனது படைகளை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் சீனாவின் நடவடிக்கை காரணமாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.  விரைவில் இது குறித்து பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்படும்.   இந்தியா என்றுமே அமைதியை விரும்புகிறது என்பதை நான் உலக நாடுகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்.   ஆயினும் இந்தியப் படைகள் தனது எல்லையை காக்கும் அளவுக்கு திறமையும் வலிமையுக் கொண்டுள்ளது” என கூறியுள்ளார்.