ரஜினியின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்ற ‘கபாலி’ ரஞ்சித்!

--

கோலிவுட்டின் பெரும்பாலான இயக்குநர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வாழ்நாளில் ஒரு படமேனும் இயக்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வாய்ப்பு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநருக்கு மட்டுமே ரஜினி இரண்டாம் முறையாகவும் தன்னை இயக்கும் வாய்ப்பு வழங்குவார்.

கபாலியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து  சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் என்று முடிவாகி இருக்கிறது. அது கபாலி இரண்டாம் பாகமல்ல என்பதை மட்டும் ரஞ்சித் சொல்லியிருந்தார்.
ரஜினியை இயக்கிய இயக்குநர்களில் 29 பேருக்கே அவரை வைத்து இரண்டு மற்றும் அதற்கு அதிகமான படங்ளை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது அந்த பட்டியலில் 30-வதாக இணைந்திருப்பவர் பா.ரஞ்சித்.
rajini-ranjith
ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் என்ற வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் எஸ்.பி. முத்துராமன் ஆவார். இவர் இயக்கத்தில் 24 படங்களில் ரஜினி நடித்துள்ளார். அடுத்ததாக தனது குருநாதர் பாலச்சந்தர் இயக்கத்தில் 10 படங்களும், ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 9 படங்களும்,  ராஜசேகர்  இயக்கத்தில் 6 படங்களும் நடித்துள்ளார். தெளிவான அட்டவணை பின்வருமாறு
1. எஸ்.பி முத்துராமன் – (24)
2. கே.பாலச்சந்தர் – (10)
3. ஆர். தியாகராஜன் – (9)
4. ராஜசேகர் – (6)
5. பி.வாசு – (5)
6. சுரேஷ் கிருஷ்ணா – (4)
7. சி.வி. ராஜேந்திரன் – (4)
8. துரை -(4)
9. கே.எஸ்.ஆர் தாஸ் – (4)
10. தட்டினேனி ராமா ராவ் – (4)
11. மகேந்திரன் -(3)
12. கே.சி.பொக்காடியா -(3)
13. சி.வி.ஶ்ரீதர் -(3)
14. கே.எஸ்.ரவிக்குமார் -(3)
15. ஷங்கர் -(3) (ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை)
16. ஏ.ஜெகந்நாதன் -(2)
17. ஆர்.கிருஷ்ணமூர்த்தி -(2)
18. தசரி யோகானந்த் -(2)
19. தசரி நாராயண ராவ் -(2)
20. கே.நட்ராஜ் -(2)
21. சுதர்சன் நாக் -(2)
22. ப்ராயக் ராஜ் -(2)
23. பி. மாதவன் -(2)
24. முகுல். எஸ்.ஆனந்த் -(2)
25. பாரதிராஜா -(2)
26. ஐ.வி.சசி -(2)
27. வி.சி.குகநாதன் -(2)
28. புரட்சிதாசன் -(2)
29. முக்தா.வி.சீனிவாசன் -(2)
30. பா.ரஞ்சித் -(2) இரண்டவது படம் தொடங்கவிருக்கிறது
(பன்மொழிப் படங்கள் ஒரே படமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது)