ஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என்று  லைகா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் படம் 2.0.  இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து லைகா நிறுவனம் தெரிவித்திருப்பதாவது,

ரஜினியின் 2.0 படம்,  400 கோடி ரூபா செலவில் தயாராகி வரும் இதை அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.

நாடு முழுவதும் ரஜினியின் 2.0 படம் சாதனை படைக்கும் நோக்கில், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10,000 அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும்,

தமிழ், இந்தியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உட்பட 15 மொழிகளில் 100 இற்கும் அதிகமான நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன

இந்த படத்தின் இசைவெளியீடு அக்டோபர் இறுதியில் துபாயில் நடக்கிறது என்றும் லைகா நிறுவனம் தெரிவித்து உள்ளது.