ரஜினியின் அரசியல்: இயக்குநர் மணிரத்தினம் கருத்து

--

 

 

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் ஆகிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தும், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் கருத்துகளை அறிவித்திருந்தார்.

1965-இந்தி எதிர்ப்பு போராட்டம்- எக்மோர்

அதில், செய்தியாளர் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் அளித்த பதிலில், 1960ம் ஆண்டுவாக்கில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உக்கிரமாக இருந்தது என்று கூறினார். பின்னர் அதுபோன்ற ஒரு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றவில்லை. தான் 60களில் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்குள் இன்னும் அந்த எதிர்ப்புணர்வு உண்டு என்று கூறியுள்ளார்.

ஆனால், தற்போது அது விஷயமில்லை. பிறமொழிகளை கற்பதும், பயிற்சி செய்வதும் அனை வருக்கும் சிரமமானதாகவே இருக்கும். ஆகவே,  இது அரசியல் கட்சிகள் கையாள்வதற்கான விஷயமல்ல.” எனவும் கூறி உள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம்,

“அரசியலுக்கு வருவது என்பதை ரஜினிகாந்தே தீர்மானிக்க வேண்டும். அவர் அதை சரியாக செய்வார். இது அதற்கு சரியான நேரமா என்பது தெரியவில்லை. நம் எல்லோரை போலவும் அவரும் ஒரு இந்திய குடிமகன் என்றார்.

மேலும், அவர் ஒரு சினிமா நட்சத்திரம் என்ற வகையில் அவரை அரசியலுக்கு அழைப்பது சரியானதல்ல.  அரசியல் குறித்து அவருக்கு தனி பார்வை உண்டு.  தெளிவானவர் என்பதால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். தனக்கு எது சரியென படுகிறதோ எது தன்னால் முடியுமோ அதை ரஜினிகாந்த் செய்வார். அவர்குறித்து தான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறி உள்ளார்.