சென்னை: மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களை தலைவராக துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு இருந்து வரும் நிலையில், துணைத்தலைவராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் சிங் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும்,  ஹரிவன்ஸ் சிங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில்,   காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக திமுக எம்.பி. திருச்சி சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சிவா விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.