ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு!

--

download

மிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, நாளை முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து  அந்த தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிவிப்பு
தேர்தல் ஆணைய அறிவிப்பு

 

 

இதன்படி வேட்புமனு தாக்கல் வரும் 24ம் தேதி துவங்கி 31ம் தேதி முடிகிறது.

வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நாள்: ஜூன் 1

வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: ஜூன் 3

வாக்குப்பதிவு நாள்: ஜூன் 6

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 11

தேர்தல் நடவடிக்கை முடிவுறும் நாள் : ஜூன் 13

இவ்வாறு தேர்தல் கால பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வாக்களிப்பர். ஆகவே பெரும்பாலும் தங்களுக்கான ஆதரவு எவ்வளவு என்பதை கணித்து அதற்கேற்பவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும். ஆகவே பெரும்பாலும் இத் தேர்தலில் வாக்கெடுப்பு நடக்காமலேயே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.