ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் வெற்றி: அதிமுக, பாமக எம்.பி.க்கள் எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னை:

மிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெற்றி பெற்ற அதிமுக, பாமக எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா  உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி யுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் 3 பேரும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் 3 பேரும் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியான  சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்  தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோரும், திமுக சார்பில் சண்முகம், வில்சன், வைகோ ஆகியோரும்  தேர்வாகி உள்ளனர்.  வெற்றிபெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்கள் மற்றும் பாமக எம்.பி. அன்புமணி ஆகியோர்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கார்ட்டூன் கேலரி