அதிமுக சார்பில் போட்டி: எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றார் ஜி.கே.வாசன்

சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,அவர், தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான  தேர்தல்   மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 3 இடம் திமுகவும், 3 இடம் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதையொட்டி, திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். இந்த  நிலையில், அதிமுக சார்பில்  இன்று வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக உறுப்பினர்கள் 2 பேருக்கும், மற்றொரு இடம் கூட்டணி கட்சியான   தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜி.கே.வாசன் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.