பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தொடர் அமளி நீடித்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் அமளி ஓயவில்லை. இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.