ராகேஷ் அஸ்தானா சிவில் விமான பாதுகாப்புத்துறை சிறப்பு இயக்குனராக நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டில்லி:

சிபிஐயில் நடைபெற்ற அதிரடி  இயக்குனர்கள் மாற்றத்தை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா சிவில் விமானப் பாதுகாப்புப் பணித்துறையின்  சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிபிஐ இயக்குனர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும்   சிபிஐ சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல மத்தியஅரசு பணித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அலோக் வர்மாவை மாற்றி மத்திய அரசின் உத்தரவை உச்சநீதி மன்றம் ரத்து செய்த நிலையில், அலோக் வர்மாவை உடடினயாக தீயணைப்பு துறை டைரக்டராக மாற்றி, தேர்வு குழுவினர் உத்தரவிட்டனர். இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மான. இந்தி நிலையில், சிபிஐ இணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவையும் மத்திய அரசு  திடீர் என பதவி நீக்கம் செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்த நீக்கப்பட்ட ராகேஷ் அஸ்தானாவுக்கு, சிவில் விமான பாதுகாப்பு துறையினர் சிறப்பு இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.