புதுடெல்லி:

னவரி 26 வன்முறைக்குப் பிறகு டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி முதல் அவ்விடத்தில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விரைவில் அகற்றப்படுவார்கள் என உணர்ந்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும் வகையில் நள்ளிரவுக்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என செய்தி வந்தது.

இதைப் பற்றி பேசிய பாரதிய கிசான் குழு தலைவர் ராகேஷ் டிக்கெய்ட், அனைத்து விவசாயிகள் மத்தியிலும் உணர்ச்சிபொங்க பேசி, கண்ணீர் வடித்தது மட்டுமல்லாமல் என்ன நடந்தாலும் இந்த போராட்டம் தொடரும் எனவும் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டு என்னுள் பாய்ந்தாலும், இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்தது விவசாயிகளிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பு விவசாயிகளும் தற்போது போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.