மல்யுத்த வீராங்கனையுடன் மோதிய நடிகை ராக்கி சாவந்த் எலும்பு முறிப்பு: மருத்துவமனையில் அனுமதி

பஞ்சகுலா:

பிரபல மல்யுத்த வீராங்கனையுடன் மல்யுத்தம் புரிவதாக அறிவித்து களமிறங்கிய பிரபல நடிகை ராக்கி சாவந்ந், முதல் அடியிலேயே எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். கவர்ச்சி நடிகையான இவர் தமிழில்  ‘கம்பீரம்’, ‘முத்திரை’  போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தி திரையுலகில் கோலோச்சி வரும் ராக்கி, சமீபத்தில் சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண்பதற்காக சென்றிருந்தார்.

அப்போது, போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனையான ‘ரொபல்’, தன்னிடம் துணிச்சல் உள்ள யாரும் மோதல் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து வீறுகொண்டு எழுந்த ராக்கி, மல்யுத்த களத்திற்குள் குதித்தார். மல்யுத்த வீராங்கனை முன்பு தனது நடன அசைவுகளை காட்டி வெறுப்பேற்றி வந்தார். இதனால் கோபமடைந்த அந்த வீராங்கனை, ராக்கியை ஒரே தூக்காக தூக்கி தரையில் அடித்தார்.

இதில், ராக்கி சாவந்த் மயக்கமானார். இதையடுத்து போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை யினர் விரைந்து  வந்து ராக்கிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து ராக்கி  உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி