ரகசிய திருமணம் செய்துக்கொண்ட ராக்கி சாவந்த்…!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்திற்கு திருமணம் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை உறுதி செய்துள்ளார் ராக்கி சாவந்த் .

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளத்தில் திருமண அலங்காரத்துடன் ராக்கி புகைப்படங்கள் வைரலாகி வந்தது.ஆனால் இவையனைத்தும் “ஃபோட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம் என கூறி வந்தார் ராக்கி சாவந்த் .

ஆனால், தற்போது குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்ட திருமண வைபவம் நடந்து முடிந்துவிட்டதென்று ஒப்புக்கொண்டுள்ளார். எனக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது அதை உங்களிடம் உறுதி செய்கிறேன். அவர் பெயர் ரிதேஷ். லண்டனில் இருக்கிறார். அவர் திருமணம் முடிந்து அங்கு சென்றுவிட்டார். எனது விசா வந்தவுடன் நானும் சென்றுவிடுவேன் என உண்மையினை உடைத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: London, rakhi sawant, Rithesh, social media
-=-