மானபங்கம் செய்த  பெண்ணுக்கு  ‘ராக்கி கயிறு கட்ட’’ விநோத உத்தரவு..

மானபங்கம் செய்த  பெண்ணுக்கு  ‘ராக்கி கயிறு கட்ட’’ விநோத உத்தரவு..

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் விக்ரம் பக்ரி என்ற இளைஞர் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த பெண்ணை .மானபங்கம் செய்ய அவர் முயற்சித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விக்ரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விக்ரம் ஏற்கனவே திருமணமானவர் ஆவார்.

தனக்கு ஜாமீன் கேட்டு அவர் மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்ததோடு, விநோத உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

என்ன ஆணை?

குற்றவாளியான விக்ரம், ரக்‌ஷா பந்தன் தினமான திங்கள் கிழமை ( இன்று), தனது மனைவியுடன்,  புகார் அளித்த பெண் வீட்டுக்குச் சென்று, அவர் கையில் ‘ராக்கி கயிறு’’ கட்ட வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.

சகோதரிகளுக்குப் பண்டிகை நாட்களின் போது,  சொந்த அண்ணன்கள் ’முறை’ செய்வது போல் , தன்னால் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு, விக்ரம் 11 ஆயிரம் ரூபாய் ‘மொய்’ எழுத வேண்டும் என்றும்  வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளது, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம்.

-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி