நேர்மறையாகச் சிந்தியுங்கள். புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம் : ரகுல் ப்ரீத் சிங்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்

“தயவுசெய்து மிகவும் அவசியமான தேவைகளுக்காக அல்லாமல் வெளியில் வரவேண்டாம். இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்யமுடியவில்லை. ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். கவனக்குறைவாக இருக்கவேண்டாம். நேர்மறையாகச் சிந்தியுங்கள். புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.