ஸ்ரீதேவியாகும் ரகுல் பிரித் சிங்
வளர்ந்து வரும் நடிகையரில் குறிப்பிடத் தக்கவர் ரகுல் பிரித் சிங் ஒருவர். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த பிறகு முன்னணி நடிகைகளில் ஒருவராகி உள்ள இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
மறைந்த நடிகரும் முதல்வருமான என் டி ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தில் என் டி ஆரின் மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாகவும் வித்யா பாலன் கதா நாயகியாகவும் நடிக்கிறார். என் டி ராமராவுடன் நடித்த நடிகர் நடிகையர் கதா பாத்திரங்களும் இப்படத்தில் இடம் பெறுகின்றனர்.
சாவித்திரியாக சமீபத்தில் நடித்து புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் சாவித்திரியாக நடிக்கிறார். ராமராவின் திரையுலக வாழ்வின் இறுதிக் கட்டங்களில் அவருடன் ஸ்ரீதேவி நடித்துள்ளார். அவ்வகையில் ஸ்ரீதேவியின் பாத்திரத்தில் நடிக்க ரகுல் பிரித் சிங் ஒப்பந்தமாகி உள்ளார்.