ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.

அவரது பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதி, அவருடைய வாழ்க்கைக் கதை படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை சஞ்சனா ரெட்டி இயக்கவுள்ளார்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகவுள்ளது.

தற்போது அந்த பயோபிக்கில் கர்ணம் மல்லேஸ்வரியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.