அஜய் தேவ்கனின் ‘தேங்க் காட்’ படத்தில் இணைகிறார் ரகுல் ப்ரீத் சிங்…!

‘டோட்டல் தமால்’ பெற்ற வரவேற்பை தொடர்ந்து அஜய் தேவ்கன் – இந்திர குமார் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது.

‘தேங்க் காட்’ எனும் இப்படத்தில் அஜய் தேவ்கனுடன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் மற்றும் டி சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.