மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாட்டா நேனோ பாதுகாப்பற்றது : என்.சி.ஏ.பிக்கு ரஃபேல் நாடெர் பிரச்சாரம்

CAR 2 SWIFT
ஸ்விஃப்ட் (swift) மகிழுந்து
CAR 2 NANO
டாட்டா நேனோ மகிழுந்து

 

 

 

 

 

 

 

கடந்த 2015 ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் சிறிய கார்களுக்கு புதிய கார் பாதுகாப்புச் சோதனை (New Car Assessment Programme (NCAP ) அமைப்பு பரிசோதனை  நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது.  இந்த அமைப்பின் பாதுகாப்புச் சோதனை முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு அஸ்ஸாம் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வாகனப் பாதுகாப்புக் குறித்த ஒரு வழக்கில், நீதிமன்றம் ” மத்திய அரசுக்கு கொடுத்த இடைக்கால உத்தரவில், அரசு, 1500 கிலோவிற்கும் எடை குறைவான கார்கள் பாதுகாப்புத் சோதனையில் வெற்றிபெறாமல் இந்தியாவில் சந்தைப்படுத்த அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது. மேலும் அஸ்ஸாம் நீதிமன்ற எல்லைக்குள் வரும் இடங்களில் இந்தக் கார்களை விற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மாநில போக்குவரத்து துறை இந்தக் கார்கள் சந்தைப்படுத்த படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது. இந்த எல்லைக்குள் வரும் கார் வியாபாரச் சந்தை இந்திய சந்தையில் 12 சதமாகும்.
இதனைத் தொடர்ந்து என்.சி.ஏ.பி.  அமைப்பு, இந்திய கார் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , 2016 ஜனவரி ஒன்று முதல் இத்தகைய கார் தயாரிப்புகளை தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. அஸ்ஸாம் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீரிபினை கருத்தில் கொள்ள வேண்டும் . வாடிக்கையாளர்களின் உயிர் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை கார் உற்பத்தியாளர்கள் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்களான ” மாருதி சுசுகி அல்டோ, டாட்டா நேனோ, ஃபோர்ட் ஃபிகோ, ஹூண்டாய் ஐ-10, வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும் டாட்சன் ஜி.ஓ. ஆகிய கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தியாவில் விற்கப்படும் கார்களில் இந்த கார்கள் விற்பனை 20% ஆகும். மணிக்கு 64 கிமி வேகத்தில் சோதிக்கப்பட்ட மோதல் தேர்வில் , அனைத்து வாகனங்களும் பூஜ்யம் ரேட்டிங் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை முடிவுகள் வெளிவந்த பிறகு பல கார் உற்பத்தியாளர்கள், வடிவமைப்பில் மாற்றம் மற்றும் ஏர் பேக் அறிமுகப்படுத்த முன்வந்துள்ளனர்.

CAR 2 NADER nozerostars-2

CAR 2 NADER

இந்நிலையில், ஏப்ரல் 2016ல், நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் ரால்ப் நாடெர் அவர்கள்  குளோபல் என்.சி.ஏ.பி. உடன் இணைந்து “பாதுகாப்பற்ற கார்களுக்கு தடை” குறித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.

 

CAR 2 WARD
டேவிட் வார்ட்
CAR 2 CHEVROLET nozerostars-4
செவ்ரோலெட் செயில் (sail)

 

 

 

 

 

 

 

என்.சி.ஏ.பி தலைவர் டேவிட் வார்ட் கூறுகையில், “ஜி.எம். நிறுவனம் வடக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சந்தைபடுத்த முடியாத தன் தரம் குறைந்த கார்களை வேண்டுமென்றே லத்தின் அமெரிக்காவில் சந்தைப்படுத்தி வருவது அதன் இரட்டை நிலைப்பாட்டையும் சந்தர்ப்பவாதத்தையும் காட்டுவதாக வுள்ளதென கூறினார். ஜி.எம் நிறுவனம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வாடிக்கையாலர் பாதுகாப்பு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டதை நாங்கள் வரவற்றோம். ஆனால் செயலில் அதனை கடைபிடிக்க முன்வரவேண்டும்” என்றார்.
எஃப்.ஐ.ஏ. பவுண்டேசன் இயக்குநர் சவுல் பில்லிங்சே கூறுகையில், ” ரால்ப் நாடெர் கார் பாதுகாப்பு குறித்து தமது பிரச்சாரங்களை துவக்கி ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னரும், கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் ஜி,எம். தமது லத்தின் அமெரிக்க மவாடிக்கையாளரின் உயிரை துச்சமாக மதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
அவர் காணொளி கீழே:

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: குளோபல் என்.சி.ஏ.பி., சோதனையில் தோல்வி, ரால்ப் நாடெர், வாகன பாதுகாப்பு
-=-