லோகேஷ் கனகராஜின் தெலுங்கு படத்தில் இவர் தான் ஹீரோவாம் …..!

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. ரஜினி, லோகேஷ் கூட்டணி சேரும் படத்தை கமல் ஹாஸன் தயாரிப்பார் என்று தகவல் வெளியானது.

அந்த படத்திற்கு முன்பே தெலுங்கு படம் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது .

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கொடுத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் எனப் பேசப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப்படம் ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.