சசிகலா பயோபிக் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ராம் கோபால் வர்மா…!

என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரித்த படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில் ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். இது ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் சசிகலா பயோபிக்கான போஸ்டரை போட்டு ‘அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூகவலைத்தளத்திலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2017-ம் ஆண்டே ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. ஆனால், அதன்பின் ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

கார்ட்டூன் கேலரி