பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர்.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களை டைரக்டு செய்த இவர் 90 களின் பிற்பகுதியில் இந்தி சினிமாவுக்கு சென்றார்.

ரங்கீலா மற்றும் சத்யா ஆகிய படங்கள் ராம்கோபால் வர்மாவுக்கு , இந்திய அளவில் புகழ் பெற்று தந்தது.

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் அவர் சில இந்திப் படங்களை இயக்கினார்.

ஆனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் அவர் சம்பள பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

சம்பள பாக்கி கேட்டு, கடந்த செப்டம்பர் மாதம் மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (FWICE) ராம்கோபால் வர்மாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை.

இதனால் வக்கீல் நோட்டீசும் அனுப்பினர்.

இதுவரை ராம்கோபால் வர்மா எந்த பதிலும் அளிக்காததால், “அவரது படங்களில் மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் வேலை செய்ய மாட்டார்கள்” என சங்க நிர்வாகி பி.என்.திவாரி அறிவித்துள்ளார்.

தற்போது ராம்கோபால் வர்மா, ‘’12 ‘O’ CLOCK’’ என்ற தனது படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

– பா. பாரதி