படமாகிறது பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: ; ‘மர்டர் லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!

பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலைச் சம்பவத்தை, திரைப்படமாக உருவாக்கவுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

தந்தையினர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்துக்கு ‘மர்டர் லவ்’ என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில்

“இது இதயத்தைப் பிழியும் ஒரு கதையாக இருக்கப்போகிறது. இது அம்ருதா மற்றும் மாருதி ராவ் கதையை அடிப்படையாகக் கொண்டது. தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் அபாயங்களைப் பற்றியது. தந்தையர் தினத்தன்று படத்தின் போஸ்டரை வெளியிடுகிறோம்”. என தெரிவித்துள்ளார்.