டில்லி:

கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரின் முடிவை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள கோரி மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இது தொடர்பான மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் ராம்ஜெத்மலானி கூறுகையில்,‘‘எனக்கு ஒரே வாழ்நாள் ஒரு நோக்கம் மட்டும் மிச்சம் இருக்கிறது. அது மோடியை எதிர்ப்பது மட்டுமே. நான் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. கர்நாடகாவில் நடப்பது குதிரை பேரம் கிடையாது. அது கழுதை பேரம்.

ஊழலுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அழித்து தான் வாக்குகளை பெற முடியும். இது அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒட்டு மொத்த துஷ்பிரயோகமாகும். நான் கடந்த காலத்திற்குள் செல்ல விரும்பவில்லை. எனினும் எனது ஒரே நோக்கம் மோடியை எதிர்ப்பது தான்’’ என்றார்.