அயோத்தி ராமர்கோவில் இடம் வழக்கு: 2019ம் ஆண்டு ஜனவரிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைப்பு

டில்லி:

யோத்தியில் ராமர் கோவில் தொடர்பான அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய  இடம்  யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் இடம் பெற்றுள்ளனர்.

இன்று முதல் விசாரணை தொடரும் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணையின்போது, வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் பட்டியிலிட உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.

ஏற்கனவே சர்க்க்குரிய அயோத்தி ராமர் கோவில் இடம் தொடர்பான வழக்கில்,  கடந்த செப்டம்பர் 27ந்தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வழக்கை   அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற  மறுப்பு  தெரிவித்து,  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் 29ந்தேதி முதல்  விசாரித்து தீர்ப்பளிக்கும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வழக்கை ஒத்தி வைத்தது.

Leave a Reply

Your email address will not be published.