ராமர்கோவில் டிரஸ்ட் தலைவர் நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா…

அயோத்தி: மீபத்தில் பிரமாண்டமாக பூமி பூஜை நடத்திய ராமர்கோவில் தலைமை டிரஸ்ட் நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க வுள்ளன. இதற்கான அமைக்கப்பட்டுள்ள டிஸ்ட் அதற்காண பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்குள் கோவில்  கட்ட தீர்மானிக்கப்பட்டு,  பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி (2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ந்தேதி) நடைபெற்றது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில்  ஆன்மீக பாரம்பரியம் கொண்ட 135  உள்பட நாடு முழுவதும் இருந்து சுமார் 175 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அயோத்தி  பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி சுமார் 3 மணி நேரம் செலவிட்டார்.  கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த பூமி பூஜை விழா நடைபெற்றது பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

பூமிபூஜை விழாவில் முகக்கவசம் அணியாமல் கலந்துகொண்ட நிருத்யகோபால்தாஸ்

இந்த நிலையில், தற்போது ராம்மந்திர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமர்கோவில் பூமிபூஜை நிகழ்ச்சியின்போது, பிரதமர் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்த நிலையில், நிருத்யகோபால்தாஸ் மட்டும் முகமூடி அணியாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி உள்பட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.