யோகா தின விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

டில்லி

ன்று டில்லி கன்னாட் பிளேசில் நடந்த யோகா தின விழாவில் குடியரசுத்தலைவர் வேட்பாளர் பங்கேற்றார்.

யோகா தினத்தை ஒட்டி டில்லி கன்னாட் பிளேசில் இன்று யோகா பயிற்சி நடைபெற்றது.  இதில் பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு சுமார் 45 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொண்டார்.  அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என முன்னதாக நிருபர்களிடம் ராம்நாத் கூறினார்.

நேற்று தனது பீகார் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தபின் டில்லிக்கு வந்தார் ராம்நாத் கோவிந்த்.  அவருக்கு Z+ செக்யூரிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  அதனால் பத்திரிகையாளர்கள் அவரை அணுகி கேள்வி கேட்க முயன்ற போது காவலர்கள் அனுமதிக்கவில்லை.

டில்லி கன்னாட் பிளேசில் ராம்நாத்துடன் வெங்கையா நாயுடு, விஜய் கோயல், அரவிந்த் கெஜிரிவால் ஆகியோரும் விழாவில் கலந்துக் கொண்டனர்.