ஹைதராபாத்தின் நினைவுச் சின்னமாகக் கருதப்படும் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகே திரைப்படப் படப்பிடிப்புக் காட்சிக்காக சிகரெட் பிடித்ததற்காக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனிக்கு போலீஸார் ரூ.200 அபராதம் விதித்தனர்.

தெலுங்கு நட்சத்திரம் ராம் ‘ஐ ஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் , இந்த படத்தின் காட்சிக்காக அவர் சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்த போது ஹைதராபாத் போலீஸார் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தது. அபராதத் தொகையை நடிகர் ராம் செலுத்தினார்.

ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்ற இந்தத் திரைப்படத்தை பூரி ஜகநாத் இயக்குகிறார். நபா நடேஷ், நிதி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு மணி சர்மா இசையமைக்க ராஜ் தோடா ஒளிப்பதிவு செய்கிறார்.