டில்லி:

பாலியல் பலாத்கார வழக்கில் 50 வயதாகும் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் அறிவித்தார். இதன் மீதான தண்டனை விபரம் வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும் என பஞ்ச்குலா நீதிமனறம் தெரிவித்துள்ளது.

ஆஸ்ரமத்தில் பணியாற்றிய 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி வரும் 28ம் தேதி தீர்ப்பை வீடியோ காப்னரன்ஸ் மூலம் அளிக்க நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிபிஐ வக்கீல் வர்மா கூறுகையில்,‘‘ வரும் 28ம் தேதி தீர்ப்பளிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். சிறைத் தண்டனை 7 ஆண்டுகளுக்கு குறையாது. அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.