ஞ்ச்குலா

ராம் ரஹிம் பாதுகாவலர்கள் ஒரு ஐ பி எஸ் அதிகாரியை தாக்கியதாக ஹரியானா போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

ராம் ரஹிம் கைது செய்தப்பட்ட பின் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பல இந்தி செய்தி ஊடகங்களும் செய்திகளை அளித்த வண்னம் உள்ளன.   அவற்றில் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது :

பஞ்ச்குலா நீதிமன்றம் சாமியார் ராம் ரஹிம் மீது பலாத் காரக் குற்றம் நிரூபிக்கப்படதாக அறிவித்ததை ஒட்டி அவர் போலீசாரால் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று அடைக்கப்பட்டுள்ளார்.   சிறைச்சாலைக்கு அவருடன் சென்ற ஆறு மெய்க்காப்பாளர்களும், மற்றும் இரு நபர்களும் அவருடன் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

சிறையின் ஐ பி எஸ் அதிகாரியான ராவ் என்பவர் அவர்களை தடுக்கவே தகராறு ஏற்பட்டு அந்த மெய்க்காப்பாளர்கள் அவரை தாக்கி உள்ளனர்.   அதிகாரியின் கன்னத்தில் ஓருவர் ஓங்கி அறைந்ததாகவும் சொல்லப் படுகிறது.   இதற்காக அந்த ஆறு மெய்க்காப்பாளர்களும் மற்ற இரு நபர்களும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.