”சங்கேத பாஷையுடன்” அச்சடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ்..

--

”சங்கேத பாஷையுடன்” அச்சடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது.

கொரோனா பரவல் மற்றும் பிரதமர் மோடி வருகை காரணமாக அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூமி பூஜைக்கு மொத்தம் 175 அழைப்பிதழ்கள் (கார்டு) மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கார்டிலும்  தனித்தனியாகப் பாதுகாப்பு ‘சங்கேத பாஷைகள்’’  உள்ளன. ஒரு முறை மட்டுமே இந்த கார்டை பயன்படுத்தலாம்.

கார்டு வைத்துள்ள ஒருவர் அரங்கினுள் சென்று விட்டு, வெளியே வந்தால், மறுபடி உள்ளே போக முடியாது.

ராமர் கோயில் கட்டுவதற்குப் போராடிய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு கூட அழைப்பு இல்லை.

வெறும் போன் தகவல் மட்டுமே. அவர்களும் காணொலி காட்சி மூலம் தான். விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விழா மேடையில் அமர, பிரதமர் மோடி, ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகாவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்ய நாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகிய 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.

You may have missed