லக்னோ:

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு  மகாவீர் சேவா அறக்கட்டளை சார்பில்  ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

500 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய இடமாக விளங்கி வந்த உ.பி. மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கடந்த  9ந்தேதி (09-11-2019) அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி ராமஜென்ம பூமி இந்துக்களுக்கு சொந்தமானது, அங்கு ராமர்கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து, கோவில் கட்டுவதற்கு பல்வேறு அமைப்புகள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளன. அதுதொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட மொத்தம்  ரூ.10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

அதன்படி,  ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாகவும்,  தேவைப்பட்டால் மேலும் நன்கொடை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், அத்துடன், ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் தயார் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே

பீகார் தலைநகர் பாட்னாவை தலைமையிடமாக கொண்ட மகாவீர் சேவாஅறக்கட்டளை, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் தலைமையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.