Random image

2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் பணி தொடங்கும்….பாஜக முன்னாள் எம்பி

லக்னோ:

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று பாஜக முன்னாள் எம்பி ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வெளிப்படையான கருத்துகள் வெளியிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் சிலர் அவ்வப்போது ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும், ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலவருமான ராம் விலாஸ் வேதாந்தி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘பா.ஜ.க. தீர்மானத்தின்படி அயோத்தியில் வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்’’ என்றார்.