விமான நிலையம், மருத்துவக் கல்லூரிக்கு ராமர் தசரதர் பெயர்: யோகி அறிவிப்பு

லக்னோ:

பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில், ஏற்கனவே பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில்,  ராமர் பெயரில் விமான நிலையமும், ராமரின் தகப்பனார் தசரதர் பெயரில் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில் உள்ள  பைசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும்,  அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்று மாற்றப்படும் என முதல்வர் யோகி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, முஷாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், அயோத்தி (பைசாபாத்)  மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு பேசிய  மாநில முதல்வர் யோகி, அயோத்தி மாவட்டத்தில் ராமர் பெயரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், ராமரின் தந்தை தசரதர் பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும்  வாக்குறுதி அளித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது விமான நிலையம் மற்றும் மருத்துவகல்லூரிக்கும் ராமர், தசரதர் பெயர் வைக்க முடிவு செய்திருப்பது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.