ராமஜென்ம பூமி வழக்கு ஜன.4ந்தேதி முதல் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டில்லி:

யோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் ஜனவரி 4ந்தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்படுகிறது.

அயோத்தி ராமஜென்ம பூமி  தொடர்பான வழக்கு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான  இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை,  சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

அலகாபாத் தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் உள்பட 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த மனுக்கள் மீதான விசாரணை  கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தது.

இந்த நிலையில், ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு வரும் ஜன.4ம் தேதி தொடங்கும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.  அன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி