பெங்களூரு: உலகளவில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ராமச்சந்திர குஹாவை, தனது பாணியில், நகர்ப்புற நக்சல் என்று மோசமாக விமர்சனம் செய்துள்ளது பாரதீய ஜனதாக் கட்சி.

இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது கர்நாடக மாநில பாரதீய ஜனதா.

மோடி அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பேராசிரியர் ராமச்சந்திர குஹாவை போலீசார் மோசமாக இழுத்துச் சென்றனர்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மங்களூரு போன்ற பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக பாரதீய ஜனதா சார்பில் வெளியான கேள்வி-பதில் பாணியிலான ஒரு அறிக்கையில், ராமச்சந்திர குஹா ‘தன்னை ஒரு நகர்ப்புற நக்சல் மற்றும் நிழல் உலகில் சாதாரண மக்களுக்கு தெரியாமல் வாழ்பவன்’ என்று ஒப்புக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதாவின் இந்த விமர்சனம் சமூக ஆர்வலர்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.